மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர்; 2 பேர் பலி

இந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர்; 2 பேர் பலி
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல். இவர் நேற்று இரவு மதுபோதையில் பத்வார் சவுக் பகுதியில் காரை ஓட்டி சென்றுள்ளார்.

மதுபோதையில் காரை வேகமாக ஓட்டிய ராகுல் , சாலையில் முன்னே சென்ற பைக்குகள், சைக்கிள்கள் மீது மோதச்செய்து விபத்தை ஏற்படுத்தினார். இதில், பைக்குக்ள், சைக்கிள்களில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த கோர சம்பவத்தில் பைக்கில் பயணித்த முகமது இஸ்மாயில் (வயது 75), சோட்டாலா ஹானி (வயது 35) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ராகுலை அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும், அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், ராகுல் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com