சத்தீஷ்கார்: சாலை விபத்தில் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உள்பட 4 பேர் பலி

சத்தீஷ்காரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சத்தீஷ்கார்:  சாலை விபத்தில் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உள்பட 4 பேர் பலி
Published on

தாம்தரி,

சத்தீஷ்காரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சிலர் பாதுகாப்பு பணியை முன்னிட்டு, ஜக்தல்பூர் நகரில் இருந்து புறப்பட்டு ராய்ப்பூர் நகர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களுடைய வாகனம் தாம்தரி மாவட்டத்தில் காப்ரி பைபாஸ் பகுதியருகே சென்றபோது கார் ஒன்றின் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்கள் தவிர 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டனர். 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் கார் டிரைவர் என மொத்தம் 4 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com