ஒடிசா மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்


ஒடிசா மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்
x

File image

பச்சிளம் குழந்தையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புவனேஷ்வர்,

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.

சத்தீஷ்காரின் மகாசமுந்த் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு நேற்று முன்தினம் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று பிற்பகல் தம்பிதியினர் குழந்தையை குடும்ப உறுப்பினர் ஒருவரின் பொறுப்பில் இருந்தபோது இந்த கடத்தல் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி பச்சிளம் குழந்தையின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையின் சித்தி போலீசாரிடம் கூறுகையில், முன்பு அவர்கள் படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்ததாக கூறினார்.

மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளில் இருந்து அடையாளம் தெரியாத பெண், குழந்தையை மருத்துவமனையில் இருந்து எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "குழந்தையை திருடிய பெண்ணை கண்டுபிடிக்க நான்கு குழுக்களை அமைத்துள்ளோம். அனைத்து சோதனை சாவடிகளிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் பஸ்கள் மற்றும் ரெயில்களில் சோதனை செய்து வருகின்றனர்" என்றார். மருத்துவமனை இயக்குனர் பாபக்ரஹி ராத், புதிதாக பிறந்த குழந்தை விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

1 More update

Next Story