சத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் காயம் அடைந்த சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழந்து உள்ளார்.
சத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் காயம் அடைந்த சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தின் தட்மெட்லா பகுதியருகே நக்சலைட்டுகள் நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை நேற்று வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 206வது பட்டாலியனை சேர்ந்த உதவி தளபதி நிதின் பல்லே ராவ் என்பவரும் ஒருவர். இந்த நிலையில், காயமடைந்த நிதின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com