சத்தீஷ்கார்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மது பாட்டில்களை மீட்ட மதுப்பிரியர்கள்; வைரலான வீடியோ

சத்தீஷ்காரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஏறக்குறைய 5 ஆயிரம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
வைரலான வீடியோ
Published on: 

ராய்ப்பூர்

சத்தீஷ்காரில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மது பாட்டில்களை, மதுப்பிரியர்கள் மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் கனமழை பெய்து, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், அணைகளில் நீர் திறந்து விடப்பட்டு, நிலைமை மேலும் மோசமடைந்தது.

5 ஆயிரம் பேர் மீட்பு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஏறக்குறைய 5 ஆயிரம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் 16 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பஸ்தார், தாம்தாரி, ஜக்தால்பூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அப்படி மீட்கப்பட்டவர்கள் 43 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாம்தாரி மாவட்டத்தில் ஒரு மதுக்கடையில் இருந்து வெள்ளத்தில் மது பாட்டில்கள் அடித்து வரப்பட்டன. மதுபிரியர்கள், மூங்கில் கம்பில் சேலை மற்றும் வலையை கட்டி, மதுபாட்டில்களை கைப்பற்றினர். இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com