புதிய மாவட்டம் உருவாகும் வரை... 21 ஆண்டுகளாக தாடியை வெட்டாத நபர்!

சத்தீஸ்கரில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் தனது தாடியை வெட்டிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதிய மாவட்டம் உருவாகும் வரை... 21 ஆண்டுகளாக தாடியை வெட்டாத நபர்!
Published on

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் அமைக்க அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மற்றும் சக்தி ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க பாகேல் ஒப்புதல் அளித்ததாக மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் மாநிலத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் "மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்" என்ற புதிய மாவட்டம் உருவாகும் வரை தாடியை வெட்ட மாட்டேன் என்று ஒரு முதியவர் சபதம் செய்திருந்தார். இந்த சம்பவம் சற்று வினோதமாக உள்ளது.

அந்த நபரின் பெயர் ராம்சங்கர் குப்தா. அவர் ஒரு சமூக ஆர்வலர், மகேந்திரகரில் வசிப்பவர்.

மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் புதிய மாவட்டமாக மாற்றுவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து குப்தா 21 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாடியை முதன்முறையாக கடந்த ஆண்டு வெட்டினார்.

இருப்பினும், புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் நடைமுறைக்கு வர கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. இதனால் குப்தா மீண்டும் ஒரு வருடமாக தாடியை வெட்டவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேறியதும், அவர் தனது தாடியை சவரம் செய்து கொண்டார்.

இது தொடர்பக, குப்தா எம்சிபி மாவட்ட ஆட்சியரிடம் குறிப்பாணையை வழங்கினார்.

அதில், 'மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம் அமைக்கப்படும் வரை தாடியை வெட்டமாட்டேன் என்று உறுதியளித்தேன்.மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தை உருவாக்கவில்லை என்றால், நான் தாடியை வெட்டியிருக்க மாட்டேன். இது 40 ஆண்டுகால போராட்டம்.

உண்மையில் இந்த புதிய மாவட்டம் உருவாகிட போராடியவர்கள் பலரும் இப்போது இந்த உலகில் இல்லை. மாவட்டம் உருவாகவில்லை என்றால் தாடி வெட்டப்பட்டிருக்காது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுமார் நான்கு ஆண்டு கால ஆட்சியில், மாநிலத்தில் ஆறு புதிய மாவட்டங்கள், 85 புதிய தாலுகாக்கள், பல உட்பிரிவுகள் மற்றும் துணை தாலுகாக்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com