சத்தீஷ்கார்: தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல்கள் சுட்டு கொலை

சத்தீஷ்காரில் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்கள் உட்பட 3 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
சத்தீஷ்கார்: தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல்கள் சுட்டு கொலை
Published on

தன்டேவாடா,

சத்தீஷ்காரில் தன்டேவாடா மாவட்டத்தில் பராஸ்பால் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட 2 நக்சல்கள் உட்பட 3 நக்சல்களை படையினர் சுட்டு கொன்றனர். அவர்களிடம் இருந்து 3 உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் மற்றும் 3 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என தன்டேவாடா எஸ்.பி. அபிசேக் பல்லவ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com