சத்தீஷ்கார்: வீரர்கள் உள்பட 11 பேர் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த என்.ஐ.ஏ.


சத்தீஷ்கார்:  வீரர்கள் உள்பட 11 பேர் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த என்.ஐ.ஏ.
x
தினத்தந்தி 18 Jun 2025 9:53 PM IST (Updated: 19 Jun 2025 2:06 PM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் வீரர்கள் உள்பட 11 பேர் கொலை வழக்கில், பந்திரா ததி ஹங்கா என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

சத்தீஷ்காரில் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் மாவட்ட ரிசர்வ் படையினர் மற்றும் ஓட்டுநர் என வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு பயன்படுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அரசால் தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. மாவோயிஸ்டு குழுவினர் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த சம்பவத்தில், 10 வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என 11 பேர் பலியானார்கள். அப்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வழக்கு விசாரணை மேற்கொண்டது. இதுபற்றிய குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. இன்று தாக்கல் செய்துள்ளது. இதில், பந்திரா ததி ஹங்கா என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

ஐ.பி.சி., வெடிபொருட்கள் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேபோன்று சத்தீஷ்கார் விஷேஷ் ஜன் சுரக்சா அதினியம், 2005 மற்றும் யு.ஏ.(பி) சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது என என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது

1 More update

Next Story