

ராய்ப்பூர்,
இந்தியாவில் தற்போது 2-ம் அலை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாகவே சத்தீஸ்கரில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,256 பேர் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,01,500 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது 1,21,769 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பால் நேற்று 105 பேர் உயிரிழக்க, தொற்று பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 5,442 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 9,643 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 3,74,289 பேர் குணமடைந்துள்ளனர்.