சத்தீஷ்கார்: சரணடைந்த 50 நக்சலைட்டுகளின் மறுவாழ்வுக்கு மத்திய மந்திரி அமித்ஷா உறுதி

சத்தீஷ்காரில் சரணடைந்த 50 நக்சலைட்டுகளின் மறுவாழ்வுக்கு மத்திய மந்திரி அமித்ஷா உறுதியளித்து உள்ளார்.
புதுடெல்லி,
சத்தீஷ்காரின் பிஜாப்பூரில் 50 நக்சலைட்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, வன்முறையை விடுத்து அரசின் முன் சரணடைந்தனர். அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.
இதற்கு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மோடியின் கொள்கை தெளிவாக உள்ளது. ஆயுதங்களை விட்டு விட்டு, வளர்ச்சிக்கான பாதைக்கு திரும்பும் எந்தவொரு நக்சலைட்டுக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கையில் இணைய வழிவகை செய்யப்படும் என தெரிவித்து உள்ளார்.
2026-ம் ஆண்டிற்குள் நக்சலைட்டுகள் ஒழிக்கப்படுவார்கள் என கூறிய அவர், நச்கலைட்டுகள் வன்முறையை கைவிட்டு சரணடைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
கடந்த சனிக்கிழமை 15 நக்சலைட்டுகள், தன்டேவாடா போலீசார் முன் சரணடைந்தனர். இதேபோன்று அன்றைய தினம் 16 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story






