தலைமை தேர்தல் ஆணையர் பணி நியமன திருத்த மசோதா - மத்திய அரசுக்கு திருச்சி சிவா எம்.பி. கேள்வி

மசோதாவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி. வலியுறுத்தினார்.
தலைமை தேர்தல் ஆணையர் பணி நியமன திருத்த மசோதா - மத்திய அரசுக்கு திருச்சி சிவா எம்.பி. கேள்வி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தலைமை தேர்தல் ஆணையர் பணி நியமன திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, பிரதமரும், மத்திய மந்திரியும் விரும்பும் ஒரு நபரை தேர்தல் ஆணையராக நியமிக்க வகை செய்யும் இந்த மசோதாவால் எந்த அர்த்தமும் இல்லை என்றார்.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வுக்குழுவில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியை கொண்டிருப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த மசோதாவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com