தலைமை தேர்தல் கமிஷனர் விவகாரம்: இன்று முதல் தொடர் போராட்டம்- கரப்பான் பூச்சி ஜனதா அறிவிப்பு

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் ப் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கூறி வருகிறது.
தலைமை தேர்தல் கமிஷனர் விவகாரம்: இன்று முதல் தொடர் போராட்டம்- கரப்பான் பூச்சி ஜனதா அறிவிப்பு
Published on: 

மும்பை,

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், தேர்தல் கமிஷனர்களின் ஆலோசனையை ஏற்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.இந்த நிலையில் மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறிய தாவது:-

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். அவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படவேண் டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந்தேதி (இன்று) மும்பை தாதரில் உள்ள புகழ்பெற்ற சிவாஜி பூங்காவில் எங்கள் கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடத்தப்படும்.

ஞானேஷ்குமார் பதவியில் இருந்து விலகும் வரை தங்களது போராட்டம் ஓயாது. மராட்டியத்தை தொடர்ந்து கோவா, கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். அப்படியும் அவர் ராஜினாமா செய்யாவிட்டால், இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து டெல்லி ஜந்தர் மந்தரில் நாடு தழுவிய தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.’ என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com