இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2ம் அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என முக்கிய தலைவர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்கள் தரப்பில் இதுவரை எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் இல்லை என்றாலும் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் இதைத் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாகவே இரு மூத்த அதிகாரிகளும் வீட்டில் இருந்து பணிபுரிவதாகத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com