சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பூரி ஜெகநாதர் கோவிலில் சாமி தரிசனம்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பூரி ஜெகநாதர் கோவிலில் சாமி தரிசனம்
Published on

பாட்னா,

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருவபர் என்.வி.ரமணா. இவர் சுப்ரீம் கோர்ட்டின் 48-வது தலைமை நீதிபதியாவார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார்.

ஜெகநாதர் கோவிலில் சாமி தரசனத்தை முடித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒடிசா மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com