

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்-அமைச்சர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்.
திருமலைக்கு சென்ற ஷோபா சந்திரசேகர், ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்துக்கு வந்த அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று, தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதையடுத்து கோவிலுக்குள் சென்ற ஷோபா சந்திரசேகர், ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்து வழிபட்டார். தொடர்ந்து கோவிலில் உள்ள பிற சன்னதிகளிலும் வழிபாடு செய்தார். தரிசனம் முடிந்த பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (6-ந்தேதி) நடைபெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஷோபா சந்திரசேகர் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்திலும், பக்தர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தரிசனத்தை முடித்துக்கொண்டு ஷோபா சந்திரசேகர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.