இந்தியாவில் குழந்தை திருமணம் வெகுவாக குறைந்து உள்ளது -ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் முகமை

இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும் சிறுமிகள் சதவிகிதம் பாதியாக குறைந்து உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் முகமை யுனிசெப் தெரிவித்து உள்ளது. #ChildMarriages #UNICEF
இந்தியாவில் குழந்தை திருமணம் வெகுவாக குறைந்து உள்ளது -ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் முகமை
Published on

புதுடெல்லி

கடந்த காலங்களில் 2.5 கோடி குழந்தை திருமணங்கள் உலகளவில் தடுக்கப்பட்டு உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. தென் ஆசியாவில் மிகப்பெரிய குறைப்புடன் இந்தியா முன்னணியில் உள்ளது.

யுனிசெப் சிறுவர் பாதுகாப்பு தலைவரான ஜாவிய அகுலியர் கூறியதாவது:-

உலகில் இளம் பருவ வயதுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் உள்ளனர். அதனால் தெற்காசியாவில் மிக அதிகமான குழந்தை திருமணங்களின் அளவு அதன் மக்கள் தொகை அடிப்படையில், அமைந்து உள்ளது.

தற்போதைய நிலவரப்படி 27 சதவீத பெண்கள் அல்லது சுமார் 15 லட்சம் பெண்கள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து கொள்கிறார்கள். இது 47 சதவீதம் குறைந்து உள்ளது என தெரிவித்தார்.

யுனிசெப்பின் பாலின ஆலோசகர் அஞ்சு மல்ஹோத்ரா கூறும்போது, குழந்தை திருமணம், உடல்நலம், கல்வி மற்றும் முறைகேடு அபாயங்களுக்கு வழிவகிக்கிறது. மேலும் வறுமை அதிகரிக்கிறது. குழந்தை திருமணம் குறைந்து உள்ளது. இருந்தாலும் நாம் நீணட தூரம் செல்ல வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com