பள்ளிக்கூட பஸ்சை தாக்கிய கர்னி சேனா அமைப்பினர் பயந்து அலறிய பள்ளி குழந்தைகள்

'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை விதிக்க கோரி கர்னி சேனா அமைப்பினர் போரட்டம் நடத்தி வருகின்றனர்.அப்போது அவர்கள் ஒரு பள்ளிக்கூட பஸ்சை தாக்கினர் இதில் பள்ளி குழந்தைகள் பயந்து அலறினர். #Padmaavat #ChildrenCrying #StonesAttack
பள்ளிக்கூட பஸ்சை தாக்கிய கர்னி சேனா அமைப்பினர் பயந்து அலறிய பள்ளி குழந்தைகள்
Published on

புதுடெல்லி

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், `பத்மாவத்'. இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது' என்று மத்தியப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன.

இதனிடையே, 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது' என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு தடைகளை உடைத்து `பத்மாவத்' திரைப்படம் இன்று இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. இதனை எதிர்த்து மத்தியப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது.

'பத்மாவத்' படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியானா மாநிலம் குருகிராமில் நேற்று மாலை பேருந்துக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

போராட்டக்காரர்கள் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்தையும் விட்டுவைக்கவில்லை. ஜி.டி கோயங்கா உலக பள்ளிக்கூட பஸ் ஒன்று மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றி கொண்டு சென்று உள்ளது. இந்த பஸ்சை மறித் போராட்டகாரர்கள் கல்வீசி தாக்கி உள்ளனர். இதனால் பயந்து பேன மாணவ மாணவிகள் பயந்து அலறி உள்ளனர் அனைவரும் பஸ்சிற்குள்லேயே பதுங்கி உள்ளனர்.

பேருந்தை போராட்டக்காரர்கள் தாக்குவதும் குழந்தைகள் அலறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் அருகில் தான் மாநில அரசுக்கு சொந்தமான ஒரு பஸ்சிற்கு போரட்டகாரர்கள் தீவைத்து உள்ளனர்.

மாணவர்கள் சென்ற பேருந்துமீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட ராஜ்புத் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகளை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர். 'இதுதான் உங்கள் வீரமா?' என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

#Padmaavat #ChildrenCrying #StonesAttack #Karnisinvhsena

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com