மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் பணி இடைநீக்கம்

மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் பணி இடைநீக்கம்
Published on

துமகூரு: துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கோண்டிஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பனீந்திரா. இவர் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு குடிபோதையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் குடிபோதையில் மாணவிகளிடம் அவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்கும் சக ஆசிரியர்களை அவர் ஒருமையில் பேசியதுடன் அடித்து உதைத்து வந்துள்ளார்.

அவரது தொல்லை நாளுக்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட கல்வி அதிகாரி ரேவண்ணா சித்தப்பா விசாரணை நடத்தினார். அப்போது பனீந்திரா குடிபோதையில் பள்ளிக்கு வருவதுடன் மாணவிகளிடம் தவறாக நடந்ததும், ஆசிரியர்களை தாக்கியதும் உறுதியானது. இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com