

திருவனந்தபுரம்,
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல்காந்தி எம்.பி., 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இன்று தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
சீனா உலகில் "மிகச்சிறந்த மற்றும் ஈடுஇணையற்ற" ஒரு தொழில்முறை உற்பத்தி அமைப்பை வளர்ந்துள்ளது. ஆனால் அந்த அண்டை நாடு அடக்குமுறை கொண்டதாகவும் ஜனநாயகமற்றதாகவும் செயல்படுகிறது.
சீனா தொழில்முறை உற்பத்தித் துறையில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் "நுகர்வு சார்ந்த சந்தையில்" மட்டுமே இயங்கி வருகின்றன. உண்மையான வேலைவாய்ப்புகள் தொழில்முறை உற்பத்தித் துறையில்தான் உள்ளனவே தவிர, ஐடி (IT) போன்ற நுகர்வு சார்ந்த துறைகளில் இல்லை என்று ராகுல்காந்தி கருத்தை கூறினார். மேலும் இந்தியாவில் தொழில்துறை உற்பத்தியை சீனா முழுமையாகக் கைப்பற்றுவதற்கு நாம் அனுமதித்தது எனக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது என ராகுல்காந்தி மக்களவையில் வேதனையுடன் தெரிவித்தேன் என்றார்.