

புதுடெல்லி,
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய பகுதியில் சீனா அப்பட்டமாக ஆக்கிரமித்து இருப்பது குறித்து மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் சமரசமே இருக்கக்கூடாது. சீனாவுடனான எல்லை பகுதியில் ஏற்கனவே இருந்த நிலைமையை நிலைநாட்டுவதில் அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு நம்பிக்கையை உண்டாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.