அமெரிக்கா-சீனா விமானங்களின் செயலால் தென்சீன கடலில் நிலவும் போர் பதற்றம்

அமெரிக்கா-சீனா விமானங்களின் செயலால் தென்சீன கடலில் நிலவும் போர் பதற்றம் நிலவுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

வல்லரசு நாடுகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை. தைவானை உரிமை கொண்டாட விரும்பும் சீனா அரசின் எண்ணங்களுக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போடுதல், உளவு பலூன் விவகாரம், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக சீனா செயல்படுதல் போன்ற காரணங்களால் இருநாடுகளும் சமரசமின்றி செயல்படுகின்றன.

இதனை சரிகட்ட சீனா ராணுவ மந்திரி லீ ஷாங்பூ, அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரியான லாயிட் அஸ்டினை சிங்கப்பூரில் நடக்கும் உலக பாதுகாப்பு மாநாட்டில் சந்திப்பார் என நம்பப்பட்டது. இந்தநிலையில் இந்த உரையாடல் நடைபெறாது என சீனா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ராணுவ பாதுகாப்பு அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தென்சீன கடல் கருதப்படுகிறது. இருநாட்டு ராணுவங்களும் இப்பகுதியை உரிமை கொண்டாட துடிக்கின்றன. இதன் உச்சமாக தென்சீன கடலில் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க ராணுவ விமானம் மீது சீன போர் விமானம் ஒன்று ஆக்ரோஷமாக மோதுவதுபோல் பறந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com