தலாய்லாமாவை வேவு பார்த்த சீன பெண் உளவாளி பீகாரில் கைது..!

தலாய்லாமாவை வேவு பார்த்ததாக சீன பெண் உளவாளியை பீகாரில் போலீசார் கைது செய்தனர்.
தலாய்லாமாவை வேவு பார்த்த சீன பெண் உளவாளி பீகாரில் கைது..!
Published on

கயா,

திபெத் புத்தமதத்தலைவர் தலாய்லாமா, 1959-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதால், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் தங்கியுள்ளார்.

தொடர்ந்து திபெத்துக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று சீனாவிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், சீனாவோ இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயாராக இல்லை. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பீஹாரில் புத்தகயா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தலாய்லாமா வந்திருந்தார். அப்போது பெண் ஒருவரை கயா போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சீன நாட்டு உளவாளி என்பதும், தலாய்லாமாவை வேவு பார்க்க இந்தியா வந்திருப்பதாகவும் தெரியவந்தது. அவரது புகைபடத்தை வெளியிட்ட போலீசார் அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தலாய் லாமா பொது சொற்பொழிவுகளில் பங்கேற்க உள்ள புத்த கயா மாவட்டத்தில் சீனப் பெண்ணின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை உள்ளூர் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com