மம்தா பானர்ஜி வீட்டில் சிஐடி சோதனை

மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமானவர் மம்தா பானர்ஜி.
மம்தா பானர்ஜி வீட்டில் சிஐடி சோதனை
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமானவர் மம்தா பானர்ஜி. அம்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்தது. தேர்தல் தோல்வியையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக பிரிந்துள்ளது.

இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்தை போலியாக தயாரித்து மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு சபாநாயகரிடம் கொடுத்ததாக எதிர்தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது.

சிஐடி சோதனை

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் வீட்டில் மாநில சிஐடி போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து போன்று போலி ஆவணம் தயாரித்தது குறித்து சிஐடி போலீசார் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். மம்தா பானர்ஜியின் வீடும், திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நிலையில் சிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com