சினிமா பாணியில் பீகாரில் நகை கொள்ளை: 2 பேர் கைது


சினிமா பாணியில் பீகாரில் நகை கொள்ளை: 2 பேர் கைது
x

பீகாரில் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் அர்ரா என்ற பகுதியில் தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் காலை கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு திடீரென 6க்கும் மேற்பட்டகொள்ளையர்கள் கையில் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்தனர். துப்பாக்கிகளுடன் புகுந்த கொள்ளையர்களை பார்த்ததும் வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் செய்வது அறியாது அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். பின்னர் நகைக்கடையில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடித்து சென்றனர். அதிகாலை நடந்த இந்த சம்பவம் சிசிடிவி காட்சி வெளியானது.

இந்தநிலையில், தனியார் நகைக் கடையில் பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த 6 கொள்ளையர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரட்டி சென்ற போலீசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், தற்காப்புக்காக போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து நகைகள், இருசக்கர வாகனங்கள், 10 தோட்டாக்கள், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய 4 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story