சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் தற்கொலை விகிதம் நடப்பு ஆண்டில் 40 சதவீதம் சரிவு

2024-ம் ஆண்டில் சி.ஐ.எஸ்.எப். வீரர்களில் 15 பேர் தற்கொலை செய்து உள்ளனர் என சி.ஐ.எஸ்.எப். வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

2023-ம் ஆண்டில் மத்திய ஆயுத பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.) தற்கொலை விகிதம் 1 லட்சத்திற்கு 16.98 என்ற அளவில் இருந்தது. இந்த விகிதம் நடப்பு ஆண்டில் 40 சதவீதம் குறைந்து உள்ளது.

இதன்படி, 2024-ம் ஆண்டில் இந்த விகிதம் 1 லட்சத்திற்கு 9.87 என்ற அளவில் உள்ளது. மத்திய உள்விவகார துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த படையில் 5 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த விகிதம் குறைந்துள்ளது. இதனால் முக்கியதொரு மைல்கல்லை அடைந்து சி.ஐ.எஸ்.எப். சாதனை படைத்துள்ளது.

இதுபற்றி சி.ஐ.எஸ்.எப். வெளியிட்ட அறிக்கையில், 2024-ம் ஆண்டில் சி.ஐ.எஸ்.எப். வீரர்களில் 15 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 25 ஆகவும், 2022-ம் ஆண்டில் , 2022-ம் ஆண்டில் 26 ஆகவும், 2021-ம் ஆண்டில் 21 ஆகவும், 2020-ம் ஆண்டில் 18 ஆகவும் இருந்தது.

வீரர்களின் நலன்களுக்காக, மனநல திட்டங்கள் மற்றும் மனஅழுத்த மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றை சி.ஐ.எஸ்.எப். மேற்கொண்டு வருகிறது. அதன் பயனாகவே இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது என அதுபற்றிய சி.ஐ.எஸ்.எப். வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com