

புதுடெல்லி,
இந்திய எல்லை பாதுகாப்பு படையினருடன் பேச்சு நடத்துவதற்காக, வங்காளதேச எல்லை பாதுகாப்பு படை தலைவர் ஷபீனுல் இஸ்லாம் தலைமையிலான குழு நேற்று டெல்லி வந்தது. அங்கு ஷபீனுல் இஸ்லாம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம். வங்காள தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் யாரும் நுழையாமல் தடுப்போம். இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படைகளிடையே நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது. சமீபத்தில், எங்கள் படையினர் தாக்குதலில் இந்திய எல்லை படை வீரர் பலியானது துரதிருஷ்டவசமானது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.