விமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து செயலர் இன்று அவசர ஆலோசனை

விமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து செயலர் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
விமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து செயலர் இன்று அவசர ஆலோசனை
Published on

புதுடெல்லி,

எத்தியோப்பியாவில் கடந்த 10-ந்தேதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர்.

இரு விமானங்களும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளன. போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதன் எதிரொலியாக, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த ஒவ்வொரு நாடுகளாக தடை விதித்து வருகிறது. எத்தியோப்பியா, சீனா, சிங்கப்பூர், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்சு உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களில் உரிய பாதுகாப்பு மாற்றங்கள் செய்யும் வரை தடை விதிக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. அதன்படி, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் 4 மணிக்கு மேல் பறக்க அனுமதி கிடையாது என்று விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில், விமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து செயலர் இன்று மாலை 4 மணிக்கு அவசர ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com