பெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை

குற்றவாளிக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்த நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
பெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
Published on

புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு, ஆயுள் தண்டனை விதித்து சியல்டா கோர்ட்டு உத்தரவிட்டது. சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி அனிர்பன் தாஸ் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்க மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த சூழலில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேற்கு வங்காள அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன்படி குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட்டில் மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதனை கொல்கத்தா ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் கொலை தொடர்பாக, சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. சுப்ரீம்கோர்ட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வழக்குகளின் பட்டியலின்படி, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு இன்று (ஜனவரி 22 ம் தேதி) மீண்டும் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com