தலைமை நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்காதது ஏன்? மம்தா பானர்ஜி விளக்கம்

தலைமை நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்காதது ஏன்? என்பதற்கு மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். #MamataBanerjee #CJI
தலைமை நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்காதது ஏன்? மம்தா பானர்ஜி விளக்கம்
Published on

கொல்கத்தா,

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக, பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது. இதற்காக, கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை நாடியது. தீபக் மிஸ்ரா, நீதித்துறை நிர்வாகத்தை தவறாக பயன்படுத்துகிறார், சக நீதிபதிகளின் அதிருப்திக்கு ஆளானவர் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை ஆதாரமாக வைத்து காங்கிரஸ் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியது. இதில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் 7 எதிர்க்கட்சிகள் கடந்த 20ந் தேதி துணை ஜனாதிபதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவை சந்தித்து பதவி நீக்கத் தீர்மான நோட்டீசை அளித்தன.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு அளித்த கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி அந்த நோட்டீசை வெங்கையா நாயுடு நிராகரித்தார். வெங்கையா நாயுடுசட்ட வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்று பதவி நீக்க தீர்மானத்திற்கான நோட்டீஸ் நிராகரித்து உள்ளார். தீர்மான விவரங்களை முன்கூட்டியே தெரிவித்தது தவறு என நிபுணர்கள் கூறி உள்ளனர் என தெரியவந்தது.

இதற்கான 5 முக்கிய காரணங்களையும் அவர் விளக்கமாக தெரிவித்து இருந்தார். ஆனால், இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு, சட்டவிரோதமானது, தவறான தகவல்களைக் கொண்டது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் வெங்கையா நாயுடுவின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

தலைமை நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானத்துக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கவில்லை. இந்த நிலையில், தலைமை நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்காதது ஏன்? என்பதற்கு மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:- தலைமை நீதிபதிக்கு எதிராக காங்கிரஸ் தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வந்தது தவறானது.

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானத்துக்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஆனால், நாங்கள் அதை செய்யவில்லை. தகுதி நீக்க தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று நான் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியிடம் கூறினேன். நீதித்துறையில் தலையிட எங்கள் கட்சி விரும்பவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com