ஒசநகர் தாலுகாவில் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி

ஒசநகர் தாலுகாவில் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்தை மாசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஒசநகர் தாலுகாவில் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி
Published on

சிவமொக்கா:-

துணி கடை உரிமையாளர்

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா ரிப்பன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுவேதா. துணி கடை உரிமையாளர். விஜயபுரா பகுதியை சேர்ந்த பிரசாந்த் தேஸ்பாண்டே. இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். இந்தநிலையில் சுவேதா, பிரசாந்த் ஆகியோர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக தனது நண்பாகளிடம் கூறி வந்தனர்.

அப்போது இவர்களுக்கு தீர்த்தஹள்ளி தாலுகா சிபினசெரே பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவர் அறிமுகம் ஆனார். அவரிடம் சுவேதா, ரெயில்வே துறையில் உயர் அதிகாரிகள் எனக்கு தெரியும் எனவும் அவர்கள் மூலமாக ரயில்வேயில் வேலை வாங்கி கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

ரெயில்வேயில் வேலை

இதனை நம்பிய அர்ஜுன் தனது மனைவி சைத்ராவுக்கு ரெயில்வேயில் வேலை வேண்டும் என ரூ.4 லட்சத்தை சுவேதாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் ரெயில்வே துறையில் இருந்து எந்தவித பணி நியமனம் ஆணையும் வரவில்லை.

இந்தநிலையில் இதுகுறித்து அர்ஜுன், சுவதாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் அர்ஜுன் பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு சுவேதா பணத்தை திரும்ப தரமுடியாது என கூறியுள்ளார். மேலும் அர்ஜுனை அவர் மிரட்டியும் உள்ளார். இதுகுறித்து அர்ஜுன், ரிப்பன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

இதேப்போல கொப்பா பகுதியை சோந்த ஆதர்சிடம் ரூ.6 லட்சமும், சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்த நவீன்குமாரிடம் ரூ.3 லட்சமும் சுவேதா, பிரசாந்த் தேஸ்பாண்டே ஆகியோர் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் சுவேதா, பிரசாந்த் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com