முன்விரோத்தில் 2 ஆசிரியர்கள் இடையே மோதல்

பீரூர் அரசு பள்ளியில் முன்விரோத்தில் 2 ஆசிரியர்கள் இடையே மோதல் நடந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முன்விரோத்தில் 2 ஆசிரியர்கள் இடையே மோதல்
Published on

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பீரூர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெகதீஷ். இவர் ஆசிரியர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறா. இதேபோல் ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் திப்பேஸ். இவருக்கும், ஜெகதீசுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர்களுக்குள் முன்விரோதம் காரணமாகவும், பதவி ஆசை காரணமாகவும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் திப்பேஷ், ஜெகதீசை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் ஜெகதீசிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து மற்ற ஆசிரியர்கள் தகராறு குறித்து கடூர் கல்வித்துறை அதிகாரி ராஜ்குமார் என்பவரிடம் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து பீருர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com