8-ம் வகுப்பு படித்தவர் செய்த அறுவை சிகிச்சையால் அதிர்ச்சி

8-ம் வகுப்பு படித்த ஒருவர், அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. #UttarPradesh
8-ம் வகுப்பு படித்தவர் செய்த அறுவை சிகிச்சையால் அதிர்ச்சி
Published on

ஷாம்லி,

உத்தரபிரேதச மாநிலம் ஷாம்லி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மருத்துவமனை உரிமையாளர் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஷாம்லி நகரில், நர்தேவ் சிங், என்பவர், ஆர்யான் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர், சமீபத்தில் நோயாளி ஒருவருக்கு தன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது மற்றும் பெண் கம்பவுண்டர் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கும் வீடியோ இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அதிகமானோர் பகிர்ந்து கொண்டனர்.

சம்பவம் நடந்த மருத்துவமனையில், ஏற்கனவே 3 முறை விதிமீறல் காரணமாக சீல் வைக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டில் 20 நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தலைமை மருத்துவ அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து அரசு தலைமை மருத்துவர் அசோக்குமார் ஹண்டா உத்தரவிட்டார்.

ஏற்கனவே இது போன்ற சம்பவங்களில் இந்த மருத்துவமனை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் தொடர்பு காரணமாக மீண்டும் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com