நிபுணர்கள் குழு பரிந்துரைப்படி கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் - கல்வித்துறை மந்திரி தகவல்

கர்நாடகத்தில் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைப்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் குழு பரிந்துரைப்படி கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் - கல்வித்துறை மந்திரி தகவல்
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தசராவுக்கு பின்பு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. பள்ளி கல்வித்துறையும் பள்ளிகளை திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது. பள்ளிகளை திறப்பது தொடர்பாக இதுவரை நிபுணர்கள் குழுவினரிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

அவர்களது ஆலோசனையும் பெறவில்லை. அதனால் நிபுணர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திவிட்டு, அவர்களது பரிந்துரைபடி பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்திருக்கிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கும்படி கூறினாலும், அதன்படி பள்ளிகள் திறக்கப்படும்.

இல்லையெனில் படிப்படியாக திறக்கும்படி நிபுணர்கள் குழுவினர் கூறினாலும், முதற்கட்டமாக 3 முதல் 5-ம் வகுப்பு வரையும், அதன்பிறகு, 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளும் திறக்கப்படும். அவ்வாறு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அதில் காலதாமதம் ஏற்படாது வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 19-ந் தேதி நிபுணர்கள் குழுவினருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார். அன்றைய தினமே 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு பி.சி.நாகேஷ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com