குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? முப்படைகளின் விசாரணைக்குழு அறிக்கை

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் கடந்த மாதம் 8 ஆம் தேதி விபத்துக்குள்ளானது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? முப்படைகளின் விசாரணைக்குழு அறிக்கை
Published on

புதுடெல்லி,

குன்னூர் அருகே கடந்த மாதம் 8-ந்தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானி வருண் சிங், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் இந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் ஏற்படுத்தியது. ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளின் விசாரணைக்குழு பல்வேறு தரவுகளை கொண்டு தீவிரமாக ஆய்வு செய்து வந்தது. இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து என்ன என்பது குறித்து முப்படைகளின் விசாரணைக்குழு அறிக்கையின் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம். எதிபாராத விதமாக ஏற்பட்ட திடீர் மேகக்கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com