மத்திய மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை பதவி நீக்க வேண்டும் - ராஜஸ்தான் முதல்-மந்திரி வலியுறுத்தல்

மத்திய மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை பதவி நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் வலியுறுத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்களின் லட்சக்கணக்கான பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பான வழக்கை அந்த மாநில போலீசின் சிறப்பு நடவடிக்கைகள் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் மீது மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பான அரசின் விளக்கத்தை ராஜஸ்தான் ஐகோர்ட்டு நேற்று முன்தினம் பதிவுக்கு ஏற்றது.

இந்நிலையில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் நேற்று கூறுகையில், சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்க கையாடல் வழக்கில் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு உள்ளதால் மத்திய மந்திரி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார். எனவே கஜேந்திர சிங் ஷெகாவத்தை மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார்.

மேலும் அவர், இந்த கூட்டுறவு சங்க முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் 3 முறை என்னை சந்தித்து தங்கள் வலியை தெரிவித்திருக்கிறார்கள். ஷெகாவத் அவர்களை நேரடியாக சந்திக்க விரும்பாவிட்டால், தன்னை அவர்கள் சந்தித்த வீடியோ பதிவை அனுப்பவும் தயார் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com