கேரள கவர்னரிடம் ராஜினாமா கடிதம் அளித்த முதல் மந்திரி பினராயி விஜயன்

கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் கூட்டணியின் தலைவரான முதல் மந்திரி பினராயி விஜயன் கவர்னரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்.
கேரள கவர்னரிடம் ராஜினாமா கடிதம் அளித்த முதல் மந்திரி பினராயி விஜயன்
Published on

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. 14 மாவட்டங்களை கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்றது.

இதில், கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலை விட இடது ஜனநாயக முன்னணி கூடுதலாக 6 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அந்த கூட்டணி 99 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்து கொண்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி (41 தொகுதிகள்) மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலில் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நெமம் தொகுதியை கூட பா.ஜ.க. இந்த தேர்தலில் இடது சாரியிடம் விட்டு கொடுத்து விட்டது. இதனால், பா.ஜ.க.வுக்கு எந்த ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை.

ஆனால், முதல் மந்திரி பினராயி விஜயன் இந்த வெற்றி மக்களுக்கான வெற்றி. எங்களுடைய கூட்டணி மீது மீண்டும் நம்பிக்கை வைத்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் கூட்டணியின் தலைவரான முதல் மந்திரி பினராயி விஜயன் கவர்னர் ஆரிப் முகமது கானிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். இதனை கேரள கவர்னர் ஏற்று கொண்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com