பணிக்கு திரும்புமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பணிக்கு திரும்புமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
Published on

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ அமைப்பின் கீழ் ஆசிரியர்கள்அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்ற ஆசிரியர்களில் 1,273 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இந்த நிலையில், கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராடுவதா? என்று ஐகோர்ட்டு மதுரை கிளை கண்டனம் தெரிவித்தது.

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களும் போராட்டத்தில் குதிப்பதாக தெரிவித்தது. ஆசிரியர்கள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும் கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பியதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நம் உரிமைகளை சில நேரம் விட்டுக்கொடுத்து மக்கள் பணியாற்றுவது நம்முடைய கடமையாகும். சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலனுக்காகவும் பணியாற்றுவது நம்முடைய கடமையாகும். பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாண அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். பல மாநிலங்கள் ஊதிய உயர்வு முறையாக வழங்கப்படாத நிலையில் நிலுவையை, தமிழகம் வழங்கியது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com