'மக்களின் முதல்-மந்திரி' - சித்தராமையாவுக்கு எடியூரப்பா திடீர் பாராட்டு

மைசூருவில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே மேடையில் சித்தராமையாவும், எடியூரப்பாவும் பங்கேற்றனர்.
'மக்களின் முதல்-மந்திரி' - சித்தராமையாவுக்கு எடியூரப்பா திடீர் பாராட்டு
Published on

மைசூரு,

கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் தொகுதி பா.ஜனதாவை சேர்ந்த சீனிவாச பிரசாத் எம்.பி. கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் மைசூரு மண்டலத்தில் தலித் சமூகத்தின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மைசூருவில் நேற்று நடைபெற்றது.இதில் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ள முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

இதில் எடியூரப்பா பேசும்போது, 'முதல்-மந்திரி சித்தராமையாவை 'ஜனபிரிய' (மக்கள் நேசிக்கும்) முதல்-மந்திரி என்று கூறி அவரை புகழ்ந்து பேசினார். அவர்கள் அரசியல், கொள்கைகள் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நண்பர்களாக உள்ளனர். எடியூரப்பாவின் பேச்சு அங்கு கூடியிருந்த சித்த ராமையாவின் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com