டெல்லியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

டெல்லியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
டெல்லியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து
Published on

புதுடெல்லி,

ஜம்மு தவி- புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப்பெட்டி புதுடெல்லி ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இன்று காலை 6 மணியளவில் ரயில் டெல்லி ரயில் நிலையத்தின் பிளாட்பார்மில் நுழைந்த போது ரயிலின் பெட்டி தடம் புரண்டுள்ளது.

அண்மைக்காலமாக தொடர் ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தடம் புரண்ட ரயில் பெட்டியை சீர் செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com