

திருவனந்தபுரம்,
கேரளாவில் மின் தடை அமல்படுத்துவது குறித்த முடிவு அக்டோபர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கேரள மின் துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தற்போது கேரள மாநிலம் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. தேவை மற்றும் விநியோகத்துக்கு இடையிலான இடைவெளியை சரிசெய்யும் வகையில் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார்.