தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஐதராபாத்தில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்களுக்கு நீதி வேண்டும். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினார்கள்.
தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஐதராபாத்தில் ஆர்ப்பாட்டம்
Published on

ஐதராபாத்,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், படித்த வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என்று விமர்சனம் செய்தார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வரும் அபிஜித் தீப்கே என்பவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற சமூக ஊடக கட்சியை கடந்த மாதம் தொடங்கினார்.

இந்த கட்சிக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும், இளைஞர்களும் பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த கட்சி சமீபத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டது.

போராட்டம்

இந்தநிலையில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலககோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் வேறு சில அமைப்புகள் இணைந்து ஐதராபாத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

அங்குள்ள தர்ணா சவுக்கு பகுதியில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்களுக்கு நீதி வேண்டும். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினார்கள். நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்.சீ விவகாரம் ஆகியவற்றுக்காக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் முழுக்கங்களை எழுப்பினார்கள். சோனம் வான்சக் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com