கோவை சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: அறிக்கை தாக்கல் செய்ய மகளிர் ஆணையம் உத்தரவு


கோவை சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: அறிக்கை தாக்கல் செய்ய மகளிர் ஆணையம் உத்தரவு
x

3 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான செய்தியை ஊடகங்கள் மூலம் அறிந்த தேசிய மகளிர் ஆணையம், இதனை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த கொடூரமான குற்றத்தை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், இதுதொடர்பான நடவடிக்கை விவரங்களை டி.ஜி.பி.யிடம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்தக் கொடூர குற்றச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாரதிய நியாய சட்டம் 396 சட்டப்பிரிவின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மேலும், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் முதல் தகவல் அறிக்கையை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி.யை அறிவுறுத்தி உயுள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story