காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு

தால் ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் உறைந்து காணப்படுகின்றன.
காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் வெப்பநிலை மிகவும் குறைந்து -5.2 செல்சியஸ் அளவாக பதிவானது. அதிகாலை நேரங்களில் அடர்த்தியான வெண்பனி காணப்பட்டது. பனியால் சூழப்பட்ட குல்மார்க் பகுதியில் வெப்பநிலை ஜம்முவை விட சுமார் 8 டிகிரி குறைந்துள்ளது. தால் ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் உறைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் அடுத்த வாரம் காஷ்மீரின் சமவெளிகளிலும், உயரமான பகுதிகளிலும் பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குளிரை சமாளிக்க பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் நெருப்பை மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com