டெல்லியில் 26ந்தேதிக்கு பின் குளிரலை தீவிரமடையும்; மூத்த விஞ்ஞானி தகவல்

டெல்லியில் குடியரசு தினத்திற்கு பின்னர் குளிரலை தீவிரமடையும் என இந்திய வானிலை மைய மூத்த விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் 26ந்தேதிக்கு பின் குளிரலை தீவிரமடையும்; மூத்த விஞ்ஞானி தகவல்
Published on: 

புதுடெல்லி,

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி சூழ்ந்த வானிலை காணப்படுகிறது. குளிர்காலத்தில் ஏற்பட கூடிய இதுபோன்ற நிலையால் தெளிவற்ற வானிலை ஏற்பட்டு சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. காலையில் அதிக பனிமூட்டம் ஏற்பட்டு முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் செல்கின்றன. டெல்லியில் காற்றின் தரமும் குறைந்து உள்ளது.

இந்த நிலையில், இந்திய வானிலை மைய மூத்த விஞ்ஞானி ஆர்.கே. ஜெனாமணி இன்று கூறும்போது, டெல்லியில் குடியரசு தினத்திற்கு பின்னர் (26ந்தேதிக்கு பின்பு) குளிரலை தீவிரமடைய கூடும் என்று தெரிவித்து உள்ளார்.

டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானாவில் வருகிற பிப்ரவரி 2ந்தேதி வரை மழை பெய்யாது என்றும் அவர் கணித்துள்ளார். இதேபோன்று இந்த பகுதிகளில் வெப்பநிலை 15 முதல் 17 டிகிரி செல்சியஸ் ஆக தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பு ஜனவரியில் அதிக அளவு மழை பொழிவு பதிவானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com