விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

சிக்கமகளூருவில் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
Published on

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா பேகூரை அடுத்த ஹராவரி கிராமத்தை சேர்ந்தவர் சுரக்சிதா (வயது 19). இவர் பேகூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்காக வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில் கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்தார். இந்தநிலையில் திடீரென்று சுரக்சிதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுரக்சிதாவை மீட்டு கொப்பா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சுரக்சிதா உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சிருங்கேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுரக்சிதாவின் உறவினர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களாக சுரக்சிதாவின் நடவடிக்கை பார்த்த பெற்றோர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இது பிடிக்காமல் சுரக்சிதா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிருங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com