தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு குத்ரோலி பகுதியில் உள்ள திப்பு சுல்தான் நகரில் வசிப்பவர் கதீஜா ரீனா. இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் ரீனா, கல்லூரியில் நடந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதாக தனது தாயாரிடம் கூறி உள்ளார். ஆனால், எதிர்பார்த்தப்படி மதிப்பெண் அவர் எடுக்கவில்லை. குறைந்த மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் கதீஜா ரீனா இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டில் யாருடமும் பேசாமல் இருந்துள்ளார். தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விரக்தியடைந்த கதீஜா ரீனா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மங்களூரு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மங்களூரு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com