

சிக்மகளூரு,
கர்நாடக மாநிலம் சிருங்கேரி தாலுகா வைகுண்டாபுரத்தை சேர்ந்தவர்கள் பிரதீப் (வயது 32), சந்தோஷ் (24). இவர்கள், கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி, கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர். பிறகு அவரது உடலை ஒரு கிணற்றில் வீசினர்.
மாணவியின் தந்தை புகாரின்பேரில், சிருங்கேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீர் ஹெக்டே விசாரணை நடத்தினார். இந்த வழக்கை விசாரித்த சிக்மகளூரு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உமேஷ் அடிகா, 2 வாலிபர்களுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.