பிரச்சினைகளுக்கு தீர்வு தேடிய கல்லூரி மாணவி...போலி சாமியார் செய்த விபரீத செயல்

நீ பணம் கொடுக்காவிட்டால் உனக்கும். உன் தாய்க்கும் விபரீதம் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார் போலி சாமியார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு தேடிய கல்லூரி மாணவி...போலி சாமியார் செய்த விபரீத செயல்
Published on

புனே,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ரேணுகா ஹர்ஷவர்தன் லிகிதே (வயது 25). புல் லாங்குழல் கலைஞரான இவர், புனே மாவட்டம் முல்ஷி பகுதியில் உள்ள ஒரு ஆன்மிக இசை பள்ளியில் முதுகலை இசை படிப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த 6-ந்தேதி ரேணுகா தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பவுட் போலீசார் ரேணுகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரேணுகாவின் மர ணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதன் விவரம் வருமாறு:-

ரேணுகாவுக்கு சில தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்துள்ளன. இதற்கு தீர்வு காண்பதற்காக அவர் சமூக வலைதளம் மூலம் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு சாமியாரை தொடர்பு கொண்டுள் ளார். போலி சாமியாரான அவர், 'உன் பிரச்சினைகள் தீர சுடுகாட்டில் வைத்து மாந்திரீக பூஜைகள் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ரேணுகா, கடந்த 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை அந்த சாமியாரின் வங்கிக்கணக்கிற்கு சுமார் ரூ.74 ஆயிரத்தை ஆன் லைன் மூலம் அனுப்பி உள்ளார்.

ரேணுகா தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்துவிட்ட பிறகும், அந்த சாமியார் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும், நீ பணம் கொடுக்காவிட்டால் உனக்கும். உன் தாய்க்கும் விபரீதம் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ரேணுகா, மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் அடையாளம் தெரியாத அந்த போலி சாமியார் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலை மறைவாக உள்ள போலி சாமியாரை பிடிக்க ராஜஸ்தானுக்கு விரைந்துள்ளனர்.

இந்த சம்பவம் புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com