கல்லூரி மாணவியை டீ குடிக்கலாம் என அழைத்து மது குடிக்க வைத்த ஆண் நண்பர்..அடுத்து நடந்த சம்பவம்

போதை தலைக்கேறியதும் மாணவியை தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் உதய்.
கல்லூரி மாணவியை டீ குடிக்கலாம் என அழைத்து மது குடிக்க வைத்த ஆண் நண்பர்..அடுத்து நடந்த சம்பவம்
Published on

திருப்பதி,

தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி புவனகிரி மாவட்டம், சவுட்டு பள்ளியை சேர்ந்தவர் உதய். இவர் இப்ராஹிம் பட்டினத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 14-ந் தேதி உதய் தன்னுடன் படிக்கும் சக மாணவியை டீ குடிக்க தில்சுக் நகரில் உள்ள காபி ஷாப்பிற்கு காரில் அழைத்துச் சென்றார்.

பின்னர் இப்ராகிம் பட்டினத்திற்கு திரும்பினார். அப்போது இப்ராஹிம் பட்டினத்தில் உள்ள மது கடையில் உதய் மது பாட்டில்களை வாங்கினார். பி.டி.எல் சாலையில் உள்ள ஆள் நட மாட்டம் இல்லாத இடத்திற்கு மாணவியை காரில் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து மாணவியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தார். மாணவிக்கு மது போதை தலைக் கேறியது.

இதனை பயன்படுத்திக் கொண்ட உதய் மாணவியை இப்ராஹிம் பட்டினத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து மாணவி இப்ராஹிம் பட்டினம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உதயை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com