சென்னை உள்பட 4 ஐகோர்ட்டுகளில் 6 பேரைநிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை


சென்னை உள்பட 4 ஐகோர்ட்டுகளில் 6 பேரைநிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
x

கர்நாடக ஐகோர்ட்டுக்கு 3 நீதித்துறை அதிகாரிகள் பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் (நீதிபதிகள் தேர்வு குழு) 4 மாநில ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகளை பரிந்துரைத்து உள்ளது. அதன்படி சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றும் நீதிபதி என்.செந்தில்குமார், நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகிய இருவரும் ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. இமாசலபிரதேச ஐகோர்ட்டில் 2 மூத்த வக்கீல்களான ஜியாலால் பரத்வாஜ், ரோமேஷ் வர்மா ஆகியோரை நீதிபதிகளாக பதவி உயர்வுக்கு கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.

கர்நாடக ஐகோர்ட்டுக்கு 3 நீதித்துறை அதிகாரிகள் பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி குருபரஹள்ளி வெங்கடராமரெட்டி அரவிந்தை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக உறுதி செய்தது. திரிபுரா ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி பிஸ்வஜித் பாலித்தை நிரந்தர நீதிபதியாக உறுதி செய்து கொலீஜியம் பரிந்துரைத்தது.





1 More update

Next Story